துண்டு துக்கடா வேஷமா.. ஆளை விடுங்க! - சோனியா அகர்வால்
எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோயினுக்கு சமமான அல்லது முக்கியத்துவம் மிக்க வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சும்மா துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க மாட்டேன், என்கிறார் சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்ட சோனியா அகர்வால், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சிம்பு நடிக்கும் வானம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதில் பிரகாஷ் ராஜ் ஜோடி அவர்.
அடுத்து ஒரு மலையாளப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. செய்திகளும் வெளியாகின. ஆனால் அவற்றை மறுத்துள்ளார் சோனியா. அவர் கூறுகையில், "நான் மலையாளத்தில் மம்முட்டியின் படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தவறான. சில காரணங்களுக்காக அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தமிழில் இப்போது வானம் படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன்.
எந்த மொழியாக இருந்தாலும் எனக்கும் முக்கியத்துவம் உள்ள வேடமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். துண்டு துக்கடா வேடங்கள் வேண்டாம். எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











