'குப் குப்' அருந்ததீ!

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் போய் தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பி வந்துள்ளவர் இந்த அருந்ததீ. அந்தப் படம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் ஆனதால், அப்படத்தை அப்படியே தமிழுக்கு டப் செய்து கொண்டு வந்தனர்.
தனது ஆவேசமான நடிப்பால் அருந்ததீ பக்கம் தமிழ் திரையுலகின் மறு பார்வை பட்டது. இப்போது இளைய தளபதியுன் ஜோடி சேர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.
செட்களில் அருந்ததீயைப் பார்ப்பவர்கள் அரண்டு போய் விடுகின்றனராம். காரணம், கையில் தம்மும், வாயில் புகையுமாகத்தான் காணப்படுகிறாராம்.
அடுத்தடுத்து பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் இப்படி என்று கேட்டால், உடம்பைக் குறைக்கத்தான் என்கிறாராம்.
இது உடம்பை உருக்குமே என்று குழப்பமாகி நின்றால், புகை பிடித்துக் கொண்டே இருந்தால் வயிறு மப்பாகி தொம் என்று இருக்கும். பசிக்காது. பசித்தால்தானே நாம் நிறைய சாப்பிட்டு உடம்பு பெறுக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இப்படி ஒரு டிரிக் என்கிறாராம் வாயிலிருந்து சுருள் விட்டபடி..
என்னா மாதிரியான சயின்டிபிக் திங்கிங்..!


Click it and Unblock the Notifications











