சிந்து மேனனுக்கு நடந்தது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம்தான்!
ஈரம் நாயகி சிந்து மேனன் நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. லண்டன் தொழிலதிபரை மணக்கிறார் அவர்.
ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என சில தினங்களுக்கு முன் சிந்துமேனன் குறித்து செய்திகள் பரவியது நினைவிருக்கலாம். அந்த நேரத்தில் அச் செய்தியை மறுக்கவோ ஒப்புக்கொள்ளவோ இல்லை சிந்து மேனன் குடும்பத்தினர்.
இப்போதுதான் உண்மையை வெளியிட்டுள்ளனர். அவருக்கு நடந்தது திருமணமல்ல, நிச்சயதார்த்தம்தான் என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிந்துமேனன் அண்ணன். வெளியில் யாருக்கும் சொல்லாமல் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததால் அதை, ரகசிய திருமணம் என்று நினைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
சிந்துமேனனின் வருங்கால கணவரின் பெயர் பிரபு. லண்டன் வாழ் பிஸினஸ்மேன்.
பிரபுவின் குடும்பத்தினர் இந்தியா வந்தபோதுதான் முதல் முறையாகச் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது அவர் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக அளித்தாராம். தொடர்ந்து இருவரும் பேசிப் பழகியதில் பிடித்துப் போய் திருமணத்துக்கு ஓகே சொன்னாராம்.
அதே வேகத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.
விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். அதற்கு முன் தான் ஒப்புக் கொண்ட படங்கள் அனைத்தையும் முடித்துவிடும் வேகத்தில் உள்ளார் சிந்து. திருமணத்துக்குப் பிறகு லண்டனில் செட்டிலாகிறார்களாம் சிந்து மேனன் - பிரபு தம்பதி!


Click it and Unblock the Notifications











