twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாச வீடியோ-மனித உரிமை ஆணையத்தை நாடும் நயன்

    By Staff
    |

    Nayanatara with Vishal
    சமீப காலமாக இணைய தளங்களில் உலாவி வருகிறது நம்பர் ஒன் நடிகையான நயனதாராவின் பெயரிலான ஆபாச வீடியோ.

    இதையடுத்து மனித உரிமை ஆணையத்துக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார் நயனதாரா.

    நயனதாராவும் சிம்புவுடன் மிக மிக 'நெருக்கமாக' இருந்த படங்கள் இரு ஆண்டுகளுக்கு முன் இணைய தளங்களை ஆக்கிரமித்தன. சிம்புவுடன் காதல் முறிந்ததாக நயன் அறிவித்தவுடன் இப்படங்கள் வெளியாகின.

    அவற்றைப் பார்த்து கோபமடைந்த நயன், போலீசில் புகார் செய்தார்.

    இந் நிலையில் மலையாள இயக்குநர் ஒருவருடன் நயனதாரா ஆபாச நிலையில் இருப்பதைப் போன்ற வீடியோக்கள் இணைய தளங்களிலும் எம்எம்எஸ்களாகவும் வலம் வரத் தொடங்கியியுள்ளன.

    இது கிராபிக்ஸ் மூலமாக தனது பெயரைக் கெடுக்க தனது தொழில் எதிரிகள் செய்துள்ள சதி என்று கூறி மனித உரிமை ஆணையத்திடம் போக முடிவு செய்துள்ளார் நயனதாரா.

    ஆனால், சிம்புவுடன் இவர் நெருக்கமாக இருந்த படங்கள் வெளி வந்தபோது போலீசுக்குப் போனவர் இப்போது போலீசுக்குப் போகாமல் ஏன் மனித உரிமை கமிஷனை நாட திட்டமிடுகிறார் என்று தெரியவில்லை.

    இம்மாதிரி விஷயங்களில் மனித உரிமை கமிஷன் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்றும் தெரியவில்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X