ப்ரியாமணி இப்போ கோபமணி!

By Staff

Priyamani
திறமைகளை மதிக்கத் தெரியாத சினிமாவுலகம் என திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார் சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற ப்ரியாமணி.

பின்னே... அவார்ட் வாங்கிய பிறகும் கண்டுகொள்ளமால் விட்டுவிட்டால் கோபம் வராதா... அந்தக் கோபம்தான் இப்போது அம்மணிக்கு.

பருத்தி வீரன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்வரை முத்தழகி ப்ரியாமணிக்கு விதம் விதமாக கவர்ச்சி காஸ்ட்யூம் அணிவித்துப் பார்க்க ஆவலாக இருந்தனர் தமிழ்ப் படைப்பாளிகள். அதற்கு ஏற்ற மாதிரி அவரும் உள்ளாடைகள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்து பொது நிகழ்ச்சிகளில் கலக்கினார்.

தேசிய விருதுக்கு அவர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு அவரைத் தேடி வரும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்து விட்டன.

சமீபத்தில் தான் நடிக்கவிருக்கும் புதுப் படங்கள் குறித்து பேசுகையில் பொரிந்து தள்ளிவிட்டார் ப்ரியா.

நல்ல நடிகைன்னு பெயர் வாங்கினா இவ்வளவு கஷ்டமா... அவார்ட் வாங்கறதுக்கு முன்னாடி நிறையப் பேர் வந்தாங்க. வித்தியாசமா, கலர்புல் வேடம்னு சொல்லிட்டுப் போனாங்க. இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னே தெரியல.

விருது வாங்கறது அவ்வளவு பாவமான விஷயமா. குறிப்பா முன்னணி ஹீரோக்கள் சிலர் என்னை மட்டும் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்கிறார்களாம். அப்படி என்ன செய்துவிட்டேன் நான், என்கிறார் ப்ரியா.

அவரது தாய்க்குலமோ ஒருபடி மேலே போய்விட்டார்.

எம்பொண்ணு மேல எல்லாருக்கும் பொறாமை ஜாஸ்தியாயிடுச்சி. அதனால, தப்பான நியூஸ் பரப்பி வாய்ப்புகளைப் பறிக்கிறாங்க சில நடிகைகள். அவங்கள்லாம் யாருன்னு எனக்கும் தெரியும். நானும் களத்தில் இறங்கினேன்னா அவங்க தாங்க மாட்டாங்க, என்கிறார் ஆவேசத்துடன்.

நிஜமாகவே, உலகம் தாங்காது ஆத்தா ..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X