எதியூரப்பா மகனுடன் காதலா?-ஹரிப்பிரியா விசனம்!
கர்நாடக முதல்வர் எதியூரப்பவின் மகனுக்கும், நடிகை ஹரிப்ரியாவுக்கும் இடையே அப்படி இப்படி என்று செய்திகள் கிளம்பியுள்ளன. ஆனால் இதை அழாத குறையாக மறுத்துள்ளார் ஹரிப்ரியா.
யார் இந்த ஹரிப்ரியா என்று கேட்பவர்களுக்கு- கரணுக்கு ஜோடியாக கனகவேல் காக்க படத்தில் நடித்துள்ளவர்தான் ஹரிப்ரியா. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடத்திலும் கூட நடித்து வருகிறார்.
இந்த ஹரிப்ரியாதான், எதியூரப்பாவின் மகனை தீவிரமாக காதலித்து வருவதாகவும், இவர் மீது கொண்ட அன்பு காரணமாக நிறைய நிலத்தை பரிசளித்துள்ளார் எதியூரப்பா மகன் என்றும் பெங்களூர் பக்கமிருந்து செய்திகள் கிளம்பியுள்ளன.
அப்படியா ப்ரியா என்று கேட்டால், இதெல்லாம் யார் கிளப்பி விட்ட புரளி என்றே தெரியவில்லை. நான் கன்னடத்தில் வளர்வது பிடிக்காத சிலர்தான் இப்படி கிளப்பி விட்டுள்ளனர்.
எனக்கு முதல்வர் எதியூரப்பாவுக்கு மகன் இருக்கிறாரா என்பதே தெரியாது. அப்படி இருக்கையில் நான் எப்படி காதலிக்க முடியும். இது சுத்தமான வதந்தி என்று கோபமாகவும், குமுறலாகவும் கூறுகிறார் ஹரிப்ரியா.


Click it and Unblock the Notifications











