மேனேஜருடன் பாரதி ரகசிய திருமணம்?

யுகா படத்தில் அறிமுகமான பாரதிக்கு, அவர் விலை மாதுவாக நடித்த அம்முவாகிய நான் படம்தான் புதிய திரை வாழ்க்கையைத் தந்தது.
இடையில் மாடலிங்கும் செய்து வந்தார்.
தொடர்ந்து சற்றுமுன் கிடைத்த தகவல் படம் உள்பட சில வாய்ப்புகளும் வந்தன. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு, நடித்தது போதும்... திருமணம் செய்துகொண்டு கவுரவமாக செட்டிலாகிவிட விரும்புகிறேன் என்று பேட்டியளித்தார்.
மணமகன் யாரென்று முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் திடீரென்று தனது மேலாளர் முருகனை பாரதி ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 11-ம் தேதிதான் கோயில் ஒன்றில் வைத்து அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்க தொடர்பு கொண்டால், அவரது மொபைல் எண் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பதில் வருகிறது.
எப்படியோ, சந்தோஷமாக இருந்தால் சரிதான்!


Click it and Unblock the Notifications











