த்ரிஷா கல்யாணம்: ஆந்திர தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது?

இப்போது, அவரது திருமணம் குறித்து இன்னுமொரு செய்தி வெளிவந்துள்ளது, ஆந்திர இணைய தளம் மற்றும் பத்திரிகைகளில்.
த்ரிஷாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமணம் மட்டும் இந்த ஆண்டு இல்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான், தனக்கு திருமணம் மற்றும் குழந்தை இருப்பதாகவும் செய்தி போடுகிறார்களே, என்று வருத்தத்துடன் விளக்கம் தெரிவித்திருந்தார் த்ரிஷா.
இதுகுறித்து விசாரித்தபோது, "த்ரிஷாவுக்கு நிச்சயமானதாக கூறப்படுவது வதந்தியல்ல. இதனை அவரது அம்மாவே தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். ஆனால் இதனை செய்தியாக்குவதன் மூலம் த்ரிஷாவின் வாய்ப்புகள் குறையக் காரணமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதுதான் உண்மை" என்றார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
என்னமோ...நல்லாருந்தா சரி!


Click it and Unblock the Notifications











