மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்!

By Sudha

Magane En Marumagane
சமீபத்தில் விவேக் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்துக்குள் எத்தனை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்றுபேர்தானாம். ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம். மூணே பேரு, தியேட்டருக்குள்ள உட்கார்ந்தா பயமா வேறு இருக்காதா..!

அதனால் தியேட்டர் நிர்வாகமே பார்த்து அந்த ஷோவைக் கேன்சல் செய்துவிட்டது. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் நடிகர்.

அடுத்தடுத்த ஷோக்களுக்கும், ஆபரேட்டரே 'லோன்லியாக ஃபீல்' பண்ணுமளவுக்குதான் ரசிகர்கள் வந்தார்களாம்.

'இதுக்குமேல தாங்காதுய்யா... இந்தா உன் படம்' என தயாரிப்பாளரிடம் பிரிண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்சிங்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இப்போ ரிசல்ட் ஓஹோவா என்கிறீர்களா... மூணு நாலு என்று வந்த ரசிகர்கள் எண்ணிக்கை பத்து பதினைந்து என உயர்ந்திருக்கிறதாம்.

'இதையும் சீக்கிரம் ஐடி பார்க்கா மாத்திடணும்' என தியேட்டர் முதலாளி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X