கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு?

By Sudha

Neetu Chandra
பாகிஸ்தான்: கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் நடிகை நீத்து சந்திராவுக்குத் தொடர்பு இருப்பதாக புதுச் செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.

நீத்து சந்திராவுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிக்கியுள்ள பந்து வீச்சாளர் முகம்மது ஆசிபுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

ஆனால் இதை நீத்து மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது சார்பில் அவரது பிஆர்ஓ பார்கவாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் ஆசிப் அல்லது எந்த பாகிஸ்தான் வீரரையும் நீத்துவுக்குத் தெரியாது. தேவையில்லாமல் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் நீத்துவின் பெயரை இழுக்கின்றனர். அவர் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது.

ஆசிப் எப்படி இருப்பார் என்பது கூட நீத்துவுக்குத் தெரியாது. இந்த செய்தி வெளியானதும் நான் போய் நீத்துவைப் பார்த்தேன். அப்போது அவரிடம் முகம்மது ஆசிப்பின் இன்டர்நெட் படத்தைக் காட்டி இவருடன்தான் உங்களை இணைத்துப் பேசுகிறார்கள் என்றேன். அப்போதுதான் முதல்முறையாக ஆசிபின் முகத்தையே அவர் பார்த்தார் என்று கூறியுள்ளார்.

இந்தியில் பிரபலமாகி வரும் நீத்து தமிழிலும் தீராத விளையாட்டுப் பிள்ளை, யாவரும் நலம் என நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X