அபிஷேக் கணவராக வாய்த்தது போன ஜென்ம புண்ணியம்! - உருகும் ஐஸ்
அபிஷேக் பச்சன் எனது கணவராக வாய்த்தது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
குஜாரிஷ் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சியாக நடித்ததாகவும், இதனால் அபிஷேக் பச்சன் வருத்தப்பட்டதாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என் கணவர் அபிஷேக் பச்சன் சொக்கத் தங்கம். நான் போன பிறவியில் செய்த புண்ணியத்தால்தான் அவர் எனக்கு கணவராக வாய்த்துள்ளார். திருமணத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களிலுமே நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.
இந்த அளவுக்கு நான் வளர காரணம் என் கணவர் அபிஷேக்தான். அவர் சுதந்திரம் கொடுத்ததால்தான் இதையெல்லாம் சந்திக்க முடிந்தது. சினிமாவில் நடிப்பதற்கு அவர் மட்டும் தடை போட்டிருந்தால் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பேன்.
சினிமாவில் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை எனக்குள்ள எல்லையைத்தெரிந்து வைத்துள்ளேன். அதை ஒருபோதும் மீற மாட்டேன். என் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வந்தன.
குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நான் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் நடித்து இருப்பதாக வதந்தி பரப்பினர். அதனால்தான் அபிஷேக் பச்சன் என்மேல் கோபமாக இருப்பதாகவும் பேசினர். எங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் புரளி கிளப்பினர். அதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டேன்.
இதுபோன்ற செய்திகளால் நடிகைகளின் குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியாவது சகஜம்தான். என் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, கணவர் அபிஷேக் மூவரும் சினிமாவில் இருப்பதால் என்னை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். அபிஷேக் குடும்பம் சினிமா உலகில் பிரபலமானது. அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளமாட்டேன்...", என்றார்.


Click it and Unblock the Notifications











