நகுலுடன் காதலா? - மழுப்பும் சுனேனா

காதலில் விழுந்தேனுக்கு பிறகு நகுலும் சுனேனாவும் மீண்டும் மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு சுனேனாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது காதல் இல்லை. பிரண்ட்ஷிப் மட்டும்தான். ஆனால் எல்லா விஷயங்களையும் வெளிப்படையா இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்காமானவங்க" என்று குழப்பினார்.
இதுபற்றி சுனேனாவிடம் கேட்டபோது, "எங்களுக்கிடையே மிகவும் இணக்கமான ஒரு உறவு உள்ளது. நகுல் இருக்கிறார் என்றால் மனதுக்கு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவர் எனது முதல் ஹீரோ. மிகவும் பிடித்தமானவர். அவர் நட்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுக்குமேல சொல்லத் தெரியல," என்று மழுப்பினார்.
அப்ப இது 'அதானே...'
'அதேதான்!'
Comments
காதலில் விழுந்தேன் காதல் சினிமா சுனேனா தமிழ் நகுல் cinema kadhalil vizhundhein masilamani nakul sunaina


Click it and Unblock the Notifications