ரம்லத்துடன் நயன்தாரா 'பேச்சுவார்த்தை'!

இந்த உறவில் லேட்டஸ்ட் முன்னேற்றம், பிரபுதேவாவின் மனைவி ரம்லத்துடன் சமாதானமாகப் பேசி 'ஒரு வீடு இரு வாசலு'க்கு வழி காண நயன்தாரா மேற்கொள்ளும் முயற்சிகள்தான்.
ரம்லத்தை நேரில் சந்தித்த நயன்தாரா தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், விவாகரத்து போன்ற முடிவுக்கு அவசியமின்றி இருவரும் இணைந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.
வேறு வழியின்றி இந்த முடிவை அமைதியுடன் கேட்டுக் கொண்டாராம் ரம்லத். இந்த மவுனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட பிறகே பிரபுதேவாவை தன் துபாயிலிருக்கும் தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினாராம் நயன்.
சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ள நயன்தாரா, திருமணம் எப்போது அல்லது ஏற்கெனவே முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார்.
ஆனால் நிச்சயம் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் நயன்.
ஆக... செட்டில்மெண்ட் ஆகிடுச்சின்னு சொல்லுங்க!


Click it and Unblock the Notifications











