திருடி சிக்கினாரா நடிகை?
பிரபலமான வில்லன் நடிகர் ஒருவரின் முன்னாள் மனைவி மலேசியாவுக்குப் போயிருந்தபோது ஷாப்பிங் வளாகத்தில் சில பொருட்களை திருடியதாக மாட்டி, தப்பித்தோம், பிழைத்தோம் என தப்பி வந்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த நடிகர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரகாசமான வில்லன் ஆவார். இவருக்கும், இவரது காதல் மனைவிக்கும் சமீபத்தில்தான் விவாகரத்து ஆனது. அடுத்த கல்யாணத்துக்கும் கூட நடிகர் தயாராகி விட்டார்.
இவரது முன்னாள் மனைவி சமீபத்தில மலேசியா போனார். அங்கு பெரிய ஷாப்பிங் வளாகத்தில் பர்ச்சேஸ் செய்துள்ளார். அப்போது பில்லில் ஏறாத சில பொருட்கள் இவரது கூடைக்குள் எப்படியோ வந்துள்ளன.
இதையடுத்து இவர்தான் அவற்றை திருடியதாக கூறி பிடித்து வைத்துக் கொண்டனர். போலீஸ் வரைக்கும் போகப் போவதாக ஷாப்பிங் வளாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அந்த முன்னாள் மனைவி, உடனடியாக தனது மாஜி கணவருக்குப் போன் போட்டுள்ளார். அவரோ செல்போனை ஆப் செய்து விட்டாராம்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான நடிகை, உடனடியாக சென்னையில் உள்ள சில பிரபலங்களுக்குப் போன் போட்டு கதறினாராம். இதையடுத்து அவர்கள் தலையிட்டு நடிகையை அங்கிருந்து மீட்டு அனுப்பி வைக்க உதவினராம்.


Click it and Unblock the Notifications











