'கார்த்திகா'... பெயர் காரணம் என்ன?

By Staff

Radha with dauthter Karthika
இதென்னய்யா கேள்வி என்கிறீர்களா... ஆனால் இந்தக் கேள்விதான் இப்போது திரையுலகில் ஜோரான கிசுகிசுவாக வலம் வந்து கொண்டிருக்கிறது (ஹீரோ- ஹீரோயினுக்கு வயசானாலும் கிசுகிசுக்கள் மட்டும் எப்போதும் இளமையானவை!).

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதாவின் மகள்தான் இந்த கார்த்திகா. தெலுங்கில் அவர் நடித்த முதல்படம் ஜோஷ் வெளிவரவிருக்கும் நிலையில், தொடர்ந்து அங்கு பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தமிழிலும் மகளை அறிமுகப்படுத்தும் வேலையில் மும்முரமாகியுள்ளார் ராதா.

இந் நிலையில் எத்தனையோ பெயர்கள் இருக்க, மகளுக்கு கார்த்திகா என்ற பெயரை ஏன் வைத்தார் ராதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் சில குறும்புக்கார நிருபர்கள்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவின் முதல் நாயகனாக நடித்தவர் கார்த்திக். அதன் பிறகு இருவரும் பல படங்களில் தொடர்ந்து நடித்தனர்.

சமீபத்தில் நடந்த மலரும் நினைவுகள் பார்ட்டியிலும் இந்த பழைய ஜோடி சந்தித்து தங்கள் இளமை நினைவுகளை அசைபோட்டனராம். எப்போதும் தொடரும் அந்த 'நட்புக்கு மரியாதை' தரும் விதமாக மகளுக்கு கார்த்திகா எனப் பெயர் வைத்துவிட்டார் ராதா என்கிறார்கள்!

இதெப்டி இருக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X