மீனா 6 மாத கர்ப்பம்!

நடிகை மீனாவுக்கும் பெங்களூர் சாப்ட்வேர் எஞ்ஜீனியர் வித்யாசாகருக்கும் கடந்த வருடம் ஜூலையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் பெங்களூரில் கணவன் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
பிறகு மீண்டும் சென்னைக்கே வந்துவிட்ட மீனா, திரும்பவும் சினிமாவில் நடித்தார். இதனால் மீனாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியின் மகள் சௌந்தர்யா திருமணத்தில் கணவருடன் ஜோடியாகப் வந்திருந்தார் மீனா.
அப்போதுதான் மீனா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. விசாரித்த போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மீனாவின் தாய் மல்லிகா தெரிவித்தார்.
மீனா கூறுகையில், தற்போது பெங்களூரில் கணவருடன் தங்கியுள்ளதாகவும் டாக்டரிடம் தினமும் பரிசோதனை செய்து குழந்தையை சுகமாக பெற்றெடுக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications