ஜெனிலியா-ஜான் ஆபிரகாம் ஜோடி சேர்ந்த பின்னணி!
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார்.
ஜானின் காதலி பிபாஷாதான் ஜெனிலியாவுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட்டைப் பொறுத்தவரை தனது காதலன்/காதலி யாருடன் நடிக்கலாம், நடிகக் கூடாது எனத் தீர்மானிப்பவர்கள் நடிகர்கள்தான்.
சமீபத்தில் தீபிகா பதுகோனுடன் நடிக்கக் கூடாது என சாயிப் அலிக்கு அவரது காதலி கரீனா கபூர் உத்தரவு போட, அவரும் அப்படியே நடந்து கொண்டார்.
அதேபோல தனது காதலி கத்ரீனா கைப், எக்காரணம் கொண்டும் ஷாயித் கபூர் மற்றும் ஜான் ஆப்ரகாமுடன் நடிகக்க் கூடாது என சல்மான் கான் உத்தரவிட்டுள்ளார்.
தன் மனைவி காஜோல் ஷாரூக்கானுடன் மட்டும் நடிக்கவே கூடாது என பகிரங்கமாக அஜய் தேவ்கன் சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை விட்டது நினைவிருக்கும்.
இப்போது ஜான் ஆப்ரஹாமுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. டேவிட் தவான் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் படம் ஹூக் யா க்ரூக். இதில் அவரது ஜோடியாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமானார்.
ஏற்கெனவே இருவரும் சேர்ந்து 'சலாமி இஷ்க்' படத்தில் நடித்தபோது நெருங்கிப் பழகி விட்டதாக செய்திகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இம்முறை வித்யா பாலனுடன் நடிக்கக்கூடாது என ஜானிடம் அவரது காதலி பிபாஷா பாசு கண்டிஷன் போட்டுவிட்டார்.
இதையடுத்து இப்படத்திலிருந்து வித்யா பாலன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் ஜெனிலியா நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











