ஜெனிலியா-ரித்தேஷ் காதலுக்கு எதிர்ப்பு!

ஆனால் இந்த நேரத்தில் காதலுக்கு எதிர்ப்புச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது ஒரு ஜோடி. அதுவும் சாதாரண நபர்களல்ல... திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகை ஜெனிலியா- நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஜோடி.
பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி, சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்கள் மூலம் முன்னணி நடிகையானவர் ஜெனிலியா டிசோஸா என்ற ஹரிணி. தெலுங்கு படவுலகிலும் முன்னணி நடிகை. துஷ்கிமேரி கசம் படம் மூலம் இந்தியில் நுழைந்தவர், ஜானே து... படம் மூலம் அங்குள்ள பிரபல நடிகைகளுக்கே போட்டியாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
இந் நிலையில் ஜெனிலியாவுக்கும் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குக்கும் காதல் மலர்ந்தது. ரிதேஷ் வேறு யாருமல்ல... மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன்.
ஜெனிலியா-ரித்தேஷ் ரகசியமாக சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். ஆனாலும் இவர்கள் காதல் விவகாரம் வெளியே பரவியது. ரிதேஷ் தனது நண்பர் என்றும் நட்பு ரீதியாக இருவரும் அடிக்கடி சந்திக்கிறோம் என்றும் ஜெனிலியா கூறி வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு சர்ச்சில், ரகசியமாக மோதிரம் மாற்றிக் கொள்ள முயன்றபோது, விஷயம் அறிந்த ரிதேஷின் உறவினர்கள் விரைந்து வந்து அவரை இழுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையில் சமீபத்தில் இருவரும் மும்பையில் நள்ளிரவு வரை நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றனர். நடிகர் துஷார் கபூர் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். இரவு 11 மணிக்கு ரித்தேஷ் வந்தார். சிறிது நேரம் கழித்து ஜெனிலியா வந்தார். இருவரும் தனியாக ஓரிடத்தில் போய் அமர்ந்தனர். நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இரவு 1.30 மணிக்கு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
விருந்தில் பங்கேற்ற பலரும் இந்த சந்திப்பு பற்றியே பேசிக் கொண்டனர். எதிர்பார்த்தது போலவே அடுத்த நாள் விஷயம் ரித்தேஷ் பெற்றோர் காதுக்கு எட்டியது.
ஜெனிலியா ஆங்கிலோ இந்திய பெண் என்பதால், அது தனது அரசியல் எதிர்காலத்துக்கு ஒத்து வராது என்பதாலும் தான் அவரை திருமணம் செய்து கொள்ள விடாமல் ரித்தேஷின் தந்தை தேஷ்முக் எதிர்ப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











