காதலில் அஜ்மல்-மீனாட்சி?

அஞ்சாதே மூலம் தமிழுக்கு வந்த கேரளத்து நடிகர் அஜ்மல். தற்போது த.நா.அல. 4777 என்ற படத்தில் தற்போது நாயகனாக நடிக்கிறார் அஜ்மல்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை, தாவணியில் படு பாந்தமாக வந்து போன மீனாட்சியாக இல்லாமல், எழுச்சியான கவர்ச்சியுடன் இப்படத்தில் கிளாமர் காட்டி நடித்துள்ளார் மீனாட்சி.
மேட்டர் என்னவென்றால் மீனாட்சிக்கும், அஜ்மலுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாம். தினசரி சந்தித்துப் பேசி தங்களது நட்பை இறுக்கமாக்கி வருகிறார்களாம். ஆனால் இது காதல் போலத் தோன்றுவதாக இருவரையும் நேரில் பார்த்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
வடபழனியில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் இருவரும் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
Comments
ajmal anjathe அஜ்மல் அஞ்சாதே கருப்பசாமி குத்தகைதாரர் அஜ்மல் சினிமா தமிழ் மீனாட்சி cinema karuppasamy kuthagaitharar meenakshi


Click it and Unblock the Notifications