twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலில் அஜ்மல்-மீனாட்சி?

    By Staff
    |

    Meenakshi with Ajmal
    அஞ்சாதே அஜ்மலும், கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சியும் காதல் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறார்களாம்.

    அஞ்சாதே மூலம் தமிழுக்கு வந்த கேரளத்து நடிகர் அஜ்மல். தற்போது த.நா.அல. 4777 என்ற படத்தில் தற்போது நாயகனாக நடிக்கிறார் அஜ்மல்.

    இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை, தாவணியில் படு பாந்தமாக வந்து போன மீனாட்சியாக இல்லாமல், எழுச்சியான கவர்ச்சியுடன் இப்படத்தில் கிளாமர் காட்டி நடித்துள்ளார் மீனாட்சி.

    மேட்டர் என்னவென்றால் மீனாட்சிக்கும், அஜ்மலுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாம். தினசரி சந்தித்துப் பேசி தங்களது நட்பை இறுக்கமாக்கி வருகிறார்களாம். ஆனால் இது காதல் போலத் தோன்றுவதாக இருவரையும் நேரில் பார்த்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

    வடபழனியில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் இருவரும் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X