முடிந்தது மோகம்...படிந்தது பேரம்!

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனிலன் இந்தப் புதிய படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் அசின் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு தனது சம்பளமாக அசின் ரூ.1 கோடிக்கு மேல் கேட்டதில் விஜய்யே கொஞ்சம் ஆடித்தான் போனாராம்.
பின்னர் பேசப்பட்ட பேரத்தில் ரூ.80 லட்சத்துக்கு ஒப்புக் கொண்டாராம் அசின். தமிழில் கடைசியாக அவர் நடித்த தசாவதாரத்துக்கு ஒரு கோடிக்குமேல் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியில் அம்மணிக்கு வேறு எந்த படமும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை.
அசுதோஷ் கோவாரிகர் மற்றும் பரா கான் பட வாய்ப்புகளை, தனது கேரக்டர் வெயிட்டாக இல்லை என்று கூறி, அசின் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications