ஆர்த்தி அகர்வால் விவாகரதது!

இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ஆர்த்தி.
ஆனால், கணவருடன் உறவில் விரிசல் ஏற்பட்டதால் 6 மாதங்களுக்கு முன் ஹைதராபாத் திரும்பிவிட்ட ஆர்த்தி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு புதிய வாய்ப்புக்களும் குவி்ந்து வருகின்றன.
இந் நிலையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு முன்பு ஆர்த்தி அகர்வாலும் தெலுங்கு நடிகர் தருணும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆர்த்தியை தருண் கைவிட்டதால் ஆர்த்தி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications