'2 சி' கேட்கும் அனுஷ்கா!

இதனால் முன்னணி நடிகைகளைத் தேடி ஓட வேண்டிய கட்டாயம். புதிய நடிகைகளில் ஓவியா, அமலா பால், மேக்னா ராஜ் போன்றவர்கள் நல்ல திறமைசாலிகளாக இருந்தாலும் ரசிகர் கூட்டத்தை ஈர்க்கும் சக்தி மிக்கவர்களாக இல்லை. எனவே அந்த ரேஞ்சில் உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்புகளும் சம்பளமும் அதிகமாக உள்ளன.
அந்த வகையில் தமிழில் இன்றைய தேதிக்கு சம்பளம் மற்றும் ரசிகர்களிடம் உள்ள வரவேற்பு போன்றவற்றில் முதலிடத்தில் இருப்பவர் அனுஷ்காதான்.
இப்போது மிகவும் தேர்ந்தெடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தமிழ் தெலுங்கு மொழிகளில் மது இயக்கத்தில் ஒரு படத்திலும், கமல் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெயரிப்படாத ஒரு படம், அஜித்தின் பில்லா-2 மற்றும் மதராஸபட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ஆகியவற்றில் நடிக்கிறார்.
கமல் படத்துக்காக அனுஷ்காவுக்கு ரூ 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையே இனி தன் சம்பள வரம்பாகவும் நிர்ணயித்துள்ள அனுஷ்கா, புதிய படங்களுக்காக தன்னை அணுகுபவர்களிடமும் இரட்டை விரலைக் காட்டுகிறாராம்.


Click it and Unblock the Notifications











