லட்சுமி ராய்-டோணி: நட்பு காதலாகிறது?
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் காதல் இன்னிங்ஸ் கிட்டத்தட்ட ஆரம்பமாகிவிட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தனது நெருங்கிய தோழி நடிகை லட்சுமி ராயைப் பார்க்க 4 முறை டோனி சென்னைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ட்வென்டி 20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தபோதுதான், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியை லட்சுமிராய் சந்தித்தார். அப்போதே இருவருக்கும் இடையே நட்பு நெருக்கமானது.
அதன்பிறகு சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோதெல்லாம் இருவரும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். கிரிக்கெட் போட்டி இல்லாத நேரத்திலும், ஏதாவது விளம்பரப் பட சாக்கில் சென்னை வரும் டோணி, லட்சுமிராயைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டோனி-லட்சுமி ராய் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியது. இதை லட்சுமி ராய் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவுமில்லை. இதற்கிடையே கடந்த இரு மாதங்களில் நான்கு முறை டோனி சென்னை வந்ததாகவும் லட்சுமி ராயை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பெற்றோருக்குத் தெரியாமலும் இருமுறை டோணி சென்னைக்கு வந்து லட்சுமிராயைச் சந்தித்துள்ளார்.
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. அப்போதும் டோனி தங்கியிருந்த ஓட்டலுக்கு லட்சுமி ராய் சென்றார். இருவரும் சேர்ந்து வெளியே சில இடங்களுக்கும் சென்று வந்தனர். லட்சுமியுடனான உறவு பற்றி டோனி இதுவரை மவுனம் காத்து வருகிறார். இது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் லட்சுமி ராயோ, டோனி எனக்கு நண்பர் மட்டுமே எனக் கூறியிருக்கிறார். சென்னை டெஸ்ட் தொடங்கும் முன் டோனியைச் சந்திக்க வந்த லட்சுமி ராயை பாதுகாப்பு காரணங்களாக காவலர்கள் தடுத்தனர்.
உடனே டென்ஷனான டோணி, என் வருங்கால மனைவியை எப்படி தடுத்து நிறுத்தலாம் என சண்டைக்கு வந்துவிட்டார் என காவலர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இது பற்றி லட்சுமி ராய் கூறுகையில், டோனி என்னை வருங்கால மனைவி என்று கூறினாரா? என எனக்குத் தெரியாது. அப்படியே கூறியிருந்தாலும் அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னை சந்தித்தபோது பரிசு ஏதாவது தந்தாரா என நிறைய பேர் கேட்கிறார்கள். பரிசு தந்து என்னை கவர வேண்டிய அவசியம் டோனிக்கு இல்லை. அந்த கட்டத்தைத் தாண்டியது எங்கள் நட்பு, என்று கூறியிருந்தார் லட்சுமிராய்.
திரைப்பட நடிகைகளுடன் கிரிக்கெட் வீர்கள் இணைத்துப் பேசப்படுவதும், காதல் பரபரப்பில் விழுவதும் இது புதிதல்ல. பிரபர வீரர்கள் மன்சூர் அலிகான் பட்டோடியிலுருந்து யுவராஜ் சிங் வரை பெரும்பாலான வீரர்கள் யாராவது ஒரு நடிகையின் ரசிகர்களாகவே உள்ளனர்.
முன்பு லட்சுமி ராயுடன் ஸ்ரீசந்தும் சுற்றியது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications











