ரம்பாவும் சுயம்வரத்தில் குதிக்கிறார்!

By Staff

Ramba
இது சுயம்வரம் காலம் போலும். ஆளாளுக்கு சுயம்வரம் நடத்த கிளம்பி விட்டனர். ராக்கி சாவ்ந்த் சமீபத்தில் சுயம்வரம் நடத்தி தான் கட்டிக்கப் போகும் மணாளனை தேர்ந்தெடுத்தார். இப்போது ரம்பாவும் சுயம்வரத்திற்குக் கிளம்பி விட்டாராம்.

சமீபத்தில் என்டிடிவியுடன் இணைந்து ராக்கி கா சுயம்வர் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தினார் ராக்கி. இந்த ரியாலிட்டி ஷோவின் இறுதியில் எலேஷ் பருஜன்வாலா என்பவரை கணவராக தேர்வு செய்தார். இவரைத்தான் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் இது பெரிய டுபாக்கூர். உண்மையில் எலேஷை ராக்கி கட்டிக் கொள்ள மாட்டார். பப்ளிசிட்டிக்காகவே இவ்வாறு சுயம்வரம் நடத்தினார் ராக்கி என்று ஒரு செய்தி உலா வந்து கொண்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க இப்போது நம்மூர் ரம்பா சுயம்வரம் நடத்தப் போகிறாராம். இதற்காக ஒரு தமிழ் டிவியுடன் பேச்சு நடத்தியுள்ளாராம்.

நீண்ட காலமாகவே ரம்பாவுக்கு படம் எதுவும் கையில் இல்லை. கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு நடுவராக செயல்பட்டு வந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்பூரி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியிலும் தற்போது ரம்பாவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் அவரது வீட்டில் இப்போது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் இதுவரையிலும் ஒரு வரனும் தகையவில்லையாம்.

இந்த நிலையில்தான் ராக்கியின் ரியாலிட்டி சுயம்வரத்தைப் பார்த்து ரம்பாவும் அப்படி ஒரு சுயம்வரத்தை நடத்தும் யோசனைக்கு வந்துள்ளாராம். இதற்கு ரம்பாவின் பெற்றோரும் சம்மதம் தந்து விட்டனராம்.

சுயம்வரம் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்து டிவியுடனும் பேசிய பின்னர் பிசினஸ் குறித்தும் பேசியுள்ளனராம் ரம்பா குடும்பத்தினர். இந்த ஷோ நிச்சயம் பெரும் ஹிட் ஆகும். நிறைய வருவாய் கிடைக்கும். எனவே அதில் ஒரு பாதி பங்கை தங்களுக்குத் தர வேண்டும் என ரம்பா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட டிவி சேனலிடம் கூறியுள்ளனராம். அதற்கு அந்த டிவியும் கூட சம்மதித்து விட்டதாக தெரிகிறது.

எந்த டிவியில் இந்த சுயம்வரம் வரப் போகிறது, உண்மையிலேயே அப்படி வரப் போகிறதா, சுயம்வரத்திற்கு எப்படிப்பட்ட பார்மட்டை ரம்பா கையாளப் போகிறார் என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X