குட்டி ராதிகாவும் முன்னாள் முதல்வரும்!

By Staff

Radhika
கன்னட நடிகை குட்டி ராதிகாவுக்கும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளதாக நீண்ட நாட்களாக நிலவி கிசுகிசு இருந்து வருகிறது. இந் நிலையில் குட்டி ராதிகாவின் கிராமத்து வீட்டில் நடந்த குடும்ப விழாவில் குமாரசாமி கலந்து கொண்டதால் இந்த கிசுகிசு மேலும் வலுவடைந்துள்ளது.

தமிழில் இயற்கை படத்தில் நடித்தவர் குட்டி ராதிகா. பெங்களூர்வாசியான அவர் பின்னர் கன்னடத்திலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது கன்னடத்தில் சில படங்களில் மட்டுமே நடித்து வரும் குட்டி ராதிகாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே நெருங்கிய நட்பு நிலவுவதாக கன்னடத் திரையுலகிலும், அரசியல் உலகிலும் ஒரு கிசுகிசு உள்ளது.

இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே உள்ள செலட்டூர் கிராமத்தில் (இதுதான் குட்டி ராதிகாவின் பூர்வீக கிராமம்) உள்ள ராதிகாவின் வீட்டில் நடந்த நாகமண்டலா என்ற கிராமத்து பூஜை விழாவில் குமாரசாமி கலந்து கொண்டார்.

மங்களூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குமாரசாமி, இரவு 7 மணியளவில் குட்டி ராதிகா வீட்டுக்கு வந்தாராம்.

அவரை குட்டி ராதிகாவின் அப்பா தேவராஜ் மற்றும் குடும்பத்தினர், குட்டி ராதிகா ஆகியோர் சிறப்பாக வரவேற்று, உபசரித்துள்ளனர்.

எம்.எல்.ஏ ராமநாத் ரய், கடலோர வளர்ச்சி ஆணையத் தலைவர் நாகராஜ ஷெட்டி உள்ளிட்டோரும் குமாரசாமியுடன் சென்றனராம்.

இதற்கிடையே ஈஷ்வர் என்ற படத்தில் நடித்து வரும் குட்டி ராதிகா, அப்படத்தை விலை பேசி வாங்கி விட்டார். தற்போது படத்தில் நிறைய புதுக் கேரக்டர்களை இணைத்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறாராம் குட்டி ராதிகா.

சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கி வரும் ராதிகாவிடம் ரூ. 10 கோடி பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X