சிம்புவுக்கு ஜோடியாக சரத் மகள்?

By Staff

Varalakshmi
இன்றைக்கு கோலிவுட்டில் இதைவிட பரபரப்பான 'டாக்' வேறு இல்லை.

கோலிவுட் 'மன்மதன்' சிம்புவின் அடுத்த படமான போடா போடியில் அவருக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கப் போகிறார் என்பதே அந்த 'பரபரபரப்பு'!

கொஞ்சம் இறங்கிப் போய் விசாரித்தால், இந்தப் பரபரப்புச் செய்தியிலும் கொஞ்சம் உண்மை இருப்பது புரிய வந்தது.

சிலம்பாட்டம் படத்தின் முழு வேலைகளையும் முடித்துவிட்ட சிம்பு இப்போது போடா போடிக்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.

இந்தப் படத்தில் தனது ஒரு ஜோடியாக ஸ்ரேயாவை முடிவு செய்து வைத்துள்ளார். இன்னொரு ஜோடியாக, ஸ்ரேயாவை விட முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க அழகான, நன்கு நடனம் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடி வந்தாராம்.

அப்போதுதான் பாலே, சல்ஸா நடனங்களில் கரை கண்ட வரலட்சுமியைப் பற்றிச் சொன்னார்களாம். எவ்வளவு பெரிய இடமாக இருந்தால் என்ன, விடுவாரா சிம்பு. நேராக சரத்குமாரிடமே தொடர்பு கொண்டு தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்.

மேலும் இந்தப் படம் முழுக்க முழுக்க கனடாவிலேயே எடுக்கப்பட உள்ளதால் அங்கேயே பிறந்து வளர்ந்த வரலட்சுமி இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்றும் எடுத்துச் சொன்னாராம்.

சரத்தோ, முடிவை தன் மகளிடமே விட்டுவிட்டாராம்.

தரண் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் விக்னேஷ் சிவா இயக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா விரைவில் கனடாவின் டொரன்டோவில் நடக்க உள்ளது.

அதற்குள் சரத் மகளைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது படத்தைத் தயாரிக்கும் ஜெமினி நிறுவனம்.

மன்மதன் வலையில் மாட்டுவாரா வரலட்சுமி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X