சோனியா அகர்வால் தற்கொலை முயற்சி?

நடிகை சோனியா அகர்வாலுக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கையில் திடீரெனப் புகுந்த ஆண்ட்ரியா, பெரும் பூகம்பத்தை உருவாக்கிவிட்டார். இவருக்கும் செல்வராகவனுக்கும் இடையிலான ரகசிய உறவு அம்பலமானதால்தான் சோனியா அகர்வால் விவாகரத்து வரை போனதாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதென்று முடிவு செய்து சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்தச் செய்திதான் தற்போது மீடியாவை பிரதானமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று மாலை சோனியா அகர்வால் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் பரவ, கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது.
ஆனால் இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் குடும்பத்தின் தரப்பில் இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











