பிரெஞ்ச் பாணி பள்ளி... ரூ 100 கோடிக்கு விலை பேசும் நடிகர்!
அரசியல், சினிமா, பத்திரிகை என சகல துறைகளிலும் தனக்கென தனி இடம் வகிக்கு பிரமுகரின் உறவினருக்கு சொந்தமான பள்ளி அது. இடம்: சென்னை வளசரவாக்கம். பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பள்ளி, சிபிஎஸ்இ திட்டத்தில் இயங்குகிறது. நடிகர் நடிகைகள் மற்றும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் அதிகம் படிக்கிறார்கள்.
ஜூனியர் காலேஜ் இணைந்த அந்த மெகா பள்ளியை இப்போது ரூ 100 கோடிக்கு மேல் விலைபேசிக் கொண்டிருக்கிறாராம் ஒரு நடிகர். கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான்.
அது சரி, யாரந்த நடிகர்... எப்படி இவ்வளவு பணம் அவருக்கு வந்தது? வருமான வரித்துறைக்கு கண்ணில் எப்படி லாரிக்கணக்கில் மண்ணைத் தூவினார்?
இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்கு நம்மால் சூசகமாகத்தான் சொல்ல முடியும். மற்றதை முடிந்தால் யூகித்துக் கொள்ளுங்கள் (நேரடியாகச் சொன்னால் ஹெலிகாப்டரையே 'அனுப்பினாலும் அனுப்புவார்கள்'...!).
ஏராளமான கல்வி உதவி செய்வதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் அந்த நடிகர், கிடைக்கிற வர்த்தக விளம்பரம் ஒன்றையும் விடுவதாக இல்லை. ஏற்கெனவே தி நகர் பகுதியில் ரூ 50 கோடியில் மனைவிக்காக பெரிய அரண்மனை கட்டுகிறார் என்று வேறு இவரைப் பற்றி பரபரக்கிறார்கள். தந்தையின் தயவால் ஆட்சி மேலிடத்து ஆசியும் கல்வித் துறை உதவியும் வேறு இவருக்கு உள்ளதாம். சமீபத்திலவ் நடித்த படங்களை முதல் பிரதி அடிப்படையில் கைமாற்றியில் எக்கச்சக்க லாபமாம்.
அந்த தெம்பில்தான் நூறு கோடி என்ன... அதற்கு மேலும் கூட கொடுத்து வாங்க நான் தயார்... விற்க நீங்க தயாரா? என்கிறாராம். சமீப வருடங்களாக பள்ளியை சரிவர நடத்த முடியாமல் தவிக்கும் நிர்வாகமும் விற்றுவிடலாமா என மோவாயைத் தடவியபடி யோசிக்கிறதாம்!


Click it and Unblock the Notifications











