குவாட்டர்... வாட்டர்... மிக்சர்!
பொதுவாக பத்திரிகையாளர் காட்சிக்கு வரும் சினிமா நிருபர்களுக்கு காபி, டிபன் எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணி, தனி தியேட்டரில் உட்காரவைத்து படம் காட்டி அனுப்புவார்கள் பிஆர்ஓக்களும் படத்தின் தயாரிப்பாளர்களும்.
அப்படி சமீபத்தில் நடந்த ஒரு தமிழ்ப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி அது.
படம் முடிந்தது. வெளியில் வந்த பத்திரிகையாளர்களின் கையில் ஒரு பையைத் திணித்தார் படத்தின் பிஆர்ஓ. பிரித்துப் பார்த்தால், உள்ளே ஒரு குவார்ட்டர் பாட்டில், வாட்டர் பாக்கெட், மிக்சர் பொட்டலம், இன்ன பிற சைடிஷ்கள்...!
கொஞ்ச நஞ்சம் உணர்வுள்ளவர்கள் பையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட, மற்றவர்கள் விழுந்தடித்துக் கொண்டு வாங்கிச் சென்றார்கள். இதில் 'இன்னொரு பை கொடுய்யா' என்று கேட்டு வாங்கிச் சென்றவர்களும் உண்டு.
முன்பு மேடை போட்டு சில நடிகர்கள் 'குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் எழுதறவங்கதானே இந்த சினிமா பத்திரிகைகாரங்க' என்று கேவலப்படுத்தினார்கள்.
அதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அந்த பிஆர்ஓவும், சில சினிமா பத்திரிகையாளர்களும்...


Click it and Unblock the Notifications











