விஜயலட்சுமியின் 'காதல் கோட்டை'!

By Staff

Jai with Vijayalakshmi
காதல் கோட்டை கட்டி வருகிறாராம் காதல் கோட்டை படத்தைக் கொடுத்த அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி. இதுதான் கோலிவுட்டில் மெல்லப் பரவி வரும் கிசு கிசு தீ.

காதல் கோட்டை உள்ளிட்ட பல அருமையான படங்களைக் கொடுத்த இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, சென்னை 600028 படம் மூலம் நடிகையானார். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார் விஜயலட்சுமி.

இதையடுத்து அவரைத் தேடி பல படங்கள் வந்தன. ஆனாலும் பார்த்துப் பார்த்து கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜயலட்சுமி.

இந்த நிலையில் விஜயலட்சுமிக்கும், அந்தப் படத்தில் நடித்த ஜெய்க்கும், (இப்போது சுப்ரமணியபுரம் ஜெய் என்றால்தான் அனைவருக்கும் தெரியும்) காதல் மலர்ந்துள்ளதாக கூறுகிறார்கள் கோலிவுட்டில்.

விஜயலட்சுமியும், ஜெய்யும் இணைந்து ஒரு படத்தில் ஜோடி போடுகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் இருவரும் காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

இது வலுவான காதல் கோட்டையா, இல்லையா என்ற விவாதத்தில் மூழ்கியுள்ளதாம் கோலிவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X