சுமந்த்துக்கு பிரியா மணி கொடுத்த 'சூப்பர் கிஸ்'!

By Sudha

Sumanth and Priyamani
பிகினி, திகட்டத் திகட்ட கவர்ச்சி என தெலுங்கு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் பிரியா மணி மேலும் ஒரு படி போய், 'லிப் டூ லிப்' கிஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

தனக்கு ஏற்றம் கொடுத்த பருத்தி வீரன் முத்தழகியை சுத்தமாக சாகடித்து விட்டார் பிரியா மணி. இப்போது அவர் 'ஃப்ரீ'யா மணி ஆகி கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக தெலுங்கில் வரையறேயே இல்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் புதிய தெலுங்குப் படத்தில் இளம் ஹீரோ சுமந்த்துக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் பிரியா மணி.

ரிம்ஜிம் என்று ஒரு படம். விஜி என்பவர் இயக்குகிறார். படத்தில் நிஜமான காதல் ஜோடியைப் போலவே நடித்துள்ளனராம் பிரியா மணியும், சுமந்த்தும். படத்தைப் பார்த்த விஜிக்கு பரம திருப்தி. இருந்தாலும், ஒரு கவர்ச்சிகரமான முத்தக் காட்சி இருந்தால் நலமாக இருக்கும் என்றுதோன்றியதாம்.

இதை பிரியா மணியிடம் சொல்ல அவர் உடனே சரி என்று 'உதட்டை ஆட்டியிருக்கிறார்'. ஆனால் ஹீரோவுக்குத்தான் ரொம்ப கூச்ச நாச்சமாகி விட்டதாம். இருந்தாலும் பிரியா மணி உள்ளிட்டோர் அவரை பேசி சமாதானப்படுத்தி கூல் செய்தார்களாம்.

இருந்தாலும் ஹீரோ வெட்கப்படாமல், நடிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட முத்தக் காட்சியின்போது இயக்குநர், கேமராமேன் ஆகியோரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியில் அனுப்பி விட்ட வெள்ளைக்கார பாணியில் படு கிறக்கமாக அந்த முத்தக்காட்சியைப் படமாக்கினார்களாம்.

சும்மா சொல்லக் கூடாது, ரசிகர்களுக்கு இந்த முத்தக் காட்சி சரியான விருந்தாக அமையும் என்று பட யூனிட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்ல்லயும் சீக்கிரமா டப் பண்ணி வெளியிட்டா, இங்குள்ள ரசிகர்களும் சந்தோஷமடைவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X