ஆணுறை விளம்பரத்தில் நடிப்பாரா கிரண்?

தமிழில் ஒரு ரவுண்டு அடித்த கிரண், முடிந்த வரை கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். ஆனாலும் அவரால் பெரிய லெவலுக்குப் போக முடியவில்லை. இதனால் பீல்ட் அவுட் ஆனார்.
தற்போது தெலுங்கில் 13 வயசுப் பையனை காதலிக்கும் பெண் வேடத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். படத்தின் பெயர் ஹைஸ்கூல்.
இப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி கிரண் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.
இந்த நிலையில் கிரணைத் தேடி புதிய விளம்பரப் பட வாய்ப்பு வந்துள்ளது. அது ஆணுறை விளம்பரமாகும். இதற்கு முன்பு பூஜா பேடி காமசூத்ரா ஆணுறை விளம்பரத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் முன்னணி நடிகைகள் யாரும் ஆணுறை விளம்பரங்களில் நடித்ததில்லை.
இந்த நிலையில் தற்போது கிரணை பிரபல ஆணுறைத் தயாரிப்பு நிறுவனம் விளம்பரப் படத்தில் நடித்துத் தருமாறும், பிராண்ட் அம்பாசடராக இருக்குமாறும் கோரியுள்ளதாம்.
இதுவரை கிரண் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம். அதேசமயம், நடிக்க மாட்டேன் என்றும் கிரண் சொல்லவில்லையாம். இதனால் கிரண் நிச்சயம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











