மீண்டும் நடிப்பு-மீனா குடும்பத்தில் புகைச்சல்

By Staff

Meena
மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் துடிக்கிறாராம் மீனா. ஆனால் அதற்கு கணவர் வீட்டார் முட்டுக்கட்டை போட்டு விட்டனராம். இதனால் மீனாவுக்கும், கணவர் குடும்பத்தாருக்கும் இடையே புகைச்சல் மூண்டுள்ளதாம்.

கடந்த ஆண்டு மீனாவுக்குக் கல்யாணம் நடந்தது. பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகரை மணந்தார். சென்னையில் பாதி நாட்கள், பெங்களூரில் பாதி நாட்கள் என்று குடும்பம் நடத்தி வருகிறார்.

கல்யாணத்திற்குப் பின்னர் நடிக்கக் கூடாது என்று கல்யாணத்திற்கு முன்பே மீனாவிடம் சத்தியம் வாங்கியிருந்தாராம் வித்யாசாகர். அவரது குடும்பத்தினரும் கூட கல்யாணத்திற்குப் பின்னர் நடிக்கக் கூடாது என்று மீனா குடும்பத்தினரிடம் கூறியிருந்தனராம்.

அதற்கு அப்போது மீனா தரப்பில் ஒப்புக் கொண்டனராம். ஆனால் தற்போது மீண்டும் நடிக்க கிளம்பி விட்டார் மீனா. தற்போது கன்னடப் படம் ஒன்றிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார் மீனா.

இது வித்யாசாகர் மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். இதனால் வீட்டில் புகைச்சல் கிளம்பியுள்ளதாம்.

மேலும் மீனா முழு வீச்சில் முன்பு போல நடிக்கவும் விரும்புகிறாராம். இதனால் கிட்டத்தட்ட பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

இந்தப் பிரச்சினையை சமாளித்து சரி செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளனவாம்.

மீனாவும், வித்யாசாகர் குடும்பமும் தங்களது முடிவில் பிடிவாதமாக இருப்பதால் இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X