twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த பெரிய நிறுவனத்துக்கு இந்த வாரம் போனியே ஆகலையாம்.. சிக்காமல் உஷாரான 2 படங்கள்.. இது தொடருமா?

    By Staff
    |

    சென்னை: ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் எல்லாம் தங்கள் நிறுவனத்தின் மூலமாகத்தான் ரிலீஸ் ஆக வேண்டும் என திடீரென மீண்டும் அந்த பெரிய நிறுவனம் ரைஸ் ஆனது.

    ஆனால், இந்த வாரம் வெளியான இரண்டு பெரிய படங்களும் அந்த நிறுவனத்தை சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லையாம்.

    இந்த நிலை இப்படியே இனி வரும் வாரங்களிலும் நீடிக்குமா? என்கிற கேள்வியும் கோடம்பாக்கத்தில் பரவலாக எழுந்து வருகிறது.

    விவாகரத்து முடிவில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங்..கவலையில் ரசிகர்கள்.. ஜோசியர் சொன்ன தகவல் என்ன?விவாகரத்து முடிவில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங்..கவலையில் ரசிகர்கள்.. ஜோசியர் சொன்ன தகவல் என்ன?

    மறைமுக உத்தரவு

    மறைமுக உத்தரவு

    புதிய படங்களை எங்கள் தயாரிப்பு பேனரில் தான் ரிலீஸ் செய்தாக வேண்டும் என்கிற மறைமுக உத்தரவை போட்டு சமீபத்தில் வெளியான பல படங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கலெக்‌ஷன் பார்த்திருந்தது அந்த பெரிய நிறுவனம். தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டால் தேவையில்லாமல் அந்த நிறுவனத்துக்கு ஏன் கமிஷன் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்தது.

    இயக்குநர் அதிரடி முடிவு

    இயக்குநர் அதிரடி முடிவு

    அந்த பெரிய படத்தின் தயாரிப்பாளரே அந்த நிறுவனத்துக்கே இந்த முறையும் படத்தை கொடுத்து விடலாம் என சொன்ன போது, இயக்குநர் ஒரேயடியாக வேண்டாம் நாமே ரிலீஸ் செய்வோம். லாபமோ, நஷ்டமோ நாமே பார்த்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் எதற்கு 10 சதவீத கமிஷன் அந்த நிறுவனத்துக்கு போக வேண்டும் என அதிரடியாக மறுத்து விட்டாராம்.

    பார்ட்னர் பேச்சு

    பார்ட்னர் பேச்சு

    இயக்குநரையும் தாண்டி 30 சதவீத தயாரிப்பு பார்ட்னர் என்பதால், அந்த பெரிய தயாரிப்பாளர் இவரது பேச்சை மீற முடியவில்லையாம். சரி நாமே வெளியிட்டு விடலாம் என உறுதியாக இருந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. படத்தின் வசூல் பெரியளவில் குவிந்து வரும் நிலையில், லாபத்தை முழுதாக பார்க்கலாம் என்கிற சந்தோஷம் தற்போது அந்த தயாரிப்பாளருக்கு வந்து விட்டது என்கின்றனர்.

    அந்த தயாரிப்பாளரும்

    அந்த தயாரிப்பாளரும்

    இந்த படம் மட்டுமில்லை இன்னொரு படமும் அந்த பெரிய நிறுவனத்துக்கு இந்த வாரம் சிக்கவில்லையாம். அந்த தயாரிப்பாளரும் தானே அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்கிற முடிவில் உறுதியாக இருந்து விட்டதால், அந்த பெரிய நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாக மாறியுள்ளது.

    இனியும் தொடருமா

    இனியும் தொடருமா

    புதிய படங்களின் தயாரிப்பாளர்களும் இனி இவர்கள் இருவரும் காட்டிய வழியிலேயே பயணிக்க முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி உள்ளன. இனியும் இதே மாதிரி தொடர்ந்தால், அந்த பெரிய நிறுவனத்துக்கு பெருசா போனியே ஆகாது என்றும் கூறுகின்றனர்.

    English summary
    2 Big movie producers avoids the popular distribution house this time for this reasons shocks Kollywood. Few other Producers also wish to release their movies on own and not willing to give to that distributors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X