கான்களை மோதவிட்ட ஆசின்!

காரணம்...
சாட்சாத் நம்ம ஊர் ஆசின்தான்.
பொதுவாக அமீர்கான் தன்னுடைய படங்களில் அறிமுகம் செய்யும் நடிகைகள் தன் அனுமதி இல்லாமல் வேறு படங்களில் நடிக்கவோ, பேட்டி கொடுக்கவோ கூடாது என நினைப்பவர். ஆசினுக்கும் அப்படித்தான் சொல்லி வைத்தாராம்.
ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார் அஸின். முதல் படம் வெளி வருவதற்கு முன்பே அவரைத் தேடி வந்த வாய்ப்புகள் அப்படி. அவற்றில் சில நல்ல வாய்ப்புகளாக அமைய அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார். சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் காண ஆரம்பித்துவிட்டார் ஆசின்.
இந்தப் பக்கம், தன்னுடன் நடிப்பவர்களையெல்லாம் தனக்கு மட்டுமே சொந்தமானவர்களாகக் கருதும் தாராள மனம் கொண்ட சல்மான். ஆசினை தனது முகாமுக்குள் வரவேற்றவர், இப்போது பார்ட்டி, பங்ஷன் எதுவாக இருந்தாலும் ஆசினையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.
இதனால் ஆமிர்கான் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். தனது அடுத்த படத்துக்கும் ஆசினை ஒப்பந்தம் செய்ய இருந்தவர் அதற்குப் பதில் வேறு நடிகைகளைப் போட்டுவிட்டார்.
இன்னொரு பக்கம் சல்மான் காதலி கத்ரீனா கைப் கோபித்துக் கொண்டுள்ளாராம். இனி சல்மான் சகவாசமே வேண்டாம் என தோழிகளிடம் புலம்பி வருகிறாராரம்.
இந்த மலபார் இன்னும் என்னென்ன பூகம்பங்களுக்குக் காரணமாகப் போகிறதோ என முணுமுணுக்கிறார்கள் பாலிவுட்டில்!


Click it and Unblock the Notifications











