கரீனா-சைஃப் ரகசிய நிச்சயதார்த்தம்!

ஒரு சினிமாவுக்கு நிகரான பரபரப்பும் திருப்பமும் கொண்டதாக உள்ளது கரீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை.
ஷாஹித் கபூருடன் மிக நெருக்கமான உறவிலிருந்த கரீனா, திடீரென்று அவரை உதறிவிட்டு சைஃப் அலிகானை காதலிக்க ஆரம்பித்தார்.
இப்போது கரீனா, சைஃப் காதல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளதாக மும்பை செய்திகள் கூறுகின்றன. ஷாஹித்தாவது திருமணமாகாதவர். ஆனால் சைஃபுக்கோ திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளன (ஆனால் விவாகரத்து பெற்றுவிட்டார்!)
திருமணத்துக்கு முன் அனுபவம் முக்கியம் என்று கருதிவிட்டாரோ என்னமோ!
கடந்த வாரம் சைஃபின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்துள்ளதாம். இதுபற்றி மும்பை பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
வழக்கம்போல இதில் சம்பந்தப்பட்ட இருவரும் மட்டும் கருத்து கூறவிரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
விளைந்த கத்தரிக்காய் வியாபாரத்துக்கு வந்துதானே தீர வேண்டும்!


Click it and Unblock the Notifications











