நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?

Ayesha Takia
இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகிவிட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே காதல் பற்றிக் கொள்ள, அது தாலி கட்டாமலேயே குடித்தனம் நடத்தும் அளவுக்கு 'டெவலப்' ஆகிவிட்டதாக செய்திகள் வந்தன.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் உள்ள பிரபுதேவா குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இன்னொரு முறை என் கணவருடன் பார்த்தால் நயன்தாராவை உதைப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் பத்திரிகைகளுக்கு ஆவேசப் பேட்டி கொடுக்க, பயந்துபோன நயன்தாரா, சென்னைக்கு வருவதையே குறைத்துக் கொண்டார்.

இதை இயக்குநர் ரவிக்குமார் போன்றவர்களே கவலையுடன் சொல்லத் தொடங்கிவிட்டனர். இன்னொரு பக்கம் பெரிய நடிகர் ஒருவரும் நயனுக்கு புத்திமதி சொன்னாராம். முதலில் இதைப் புறக்கணித்த நயன், இப்போது 'தலைவர் சொன்னா கேட்டுக்கறேன்' என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரபுதேவாவுக்கும் பிரபல இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுக்கும் இடையே புது நட்பு மலர்ந்திருப்பதாகவும், இருவரும் மிக நெருங்கிப் பழகுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நெருக்கம் பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா, பிரபுதேவாவுடன் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி, இந்தியில் இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் வாண்டட் பட நாயகிதான் இந்த ஆயிஷா தாகியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிஷாவுக்கு சமீபத்தில் தான் திருமணமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X