நாகேஷ் குறித்து வதந்தி!

By Staff

Kamal with Nagesh
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது.

தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர்.

இன்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. தட்ஸ்தமிழுக்கும் அந்த தகவல் வந்து சேர்ந்தது. இதையடுத்து நாகேஷ் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார் என்று கூறி வீட்டினர் தெரிவித்தனர்.

இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் எனப் புகழப்படும் நாகேஷூக்கு இப்போது 75 வயதாகிறது. ஆனாலும் நடிப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தசாவதாரம் படத்தில் கமலுக்கு தந்தையாக நடித்திருந்தார்.

இன்னும் சில படங்களில் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக உடல்நலக் கோளாறுகளால் அவதியுற்று வந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X