ஷாஹித்-வித்யா பாலன் 'ஸ்டிராங்'!

கரீனா கபூருடன் முன்பு படு நெருக்கமாக இருந்தார் ஷாஹித். ஒரு அருமையான நாளில் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கரீனா. அடுத்த டேக்கிலேயே சைப் அலிகானுடன் டூயட் பாடப் போய் விட்டார்.
இதனால் தனித்து விடப்பட்ட ஷாஹித் கபூர் சற்றும் கவலைப்படாமல் தனது பாதையில் நடை போட ஆரம்பித்தார்.
கரீனாவைப் பிரிந்த பின்னர், அவரை அம்ரிதா ராவுடன் இணைத்துப் பேசினர். பின்னர் வித்யா பாலனுடன் இணைத்தனர். அதுவும் முறிந்து விட்டதாக பின்னர் செய்தி வந்தது.
பிறகு சானியா மிர்ஸா, பிரியங்கா சோப்ரா ஆகியோருடனும் இணைத்துப் பேசப்பட்டார் ஷாஹித்.
ஆனால் வித்யாபாலனுக்கும், ஷாஹித் கபூருக்கும் இடையே இன்னும் நெருக்கமான நட்பு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது, வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சமீபத்தில் ஜூஹு பகுதியில் உள்ள ஒரு பார் ரெஸ்டாரன்ட்டுக்கு வித்யாவும், கபூரும் வந்திருந்தனர். தனித் தனியாக வந்தாலும் கூட பாரில் இருவரும் சேர்ந்தே அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்துள்ளனர்.
வழக்கமாக அவர்கள் வரும் பார்தான் இது. இருந்தாலும் முன்பு நண்பர்கள் சகிதம் வருவார்களாம். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக இருவரும் கொடுக்குகள் இல்லாமல் தனித்து வந்ததாம்.
இருவரும் சுவாரஸ்யமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார் ரெஸ்டாரென்ட் ஊழியர்களும் சைடு கண்களால் பார்த்தபடி வேலை செய்தனராம்.
அவர்களுக்கு அருகில் இருந்த டேபிளில் ஒரு முக்கியமான புள்ளியும் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். ஆனால் அவரை கபூர் - வித்யா ஜோடி கவனிக்கவில்லையாம். அந்த புள்ளி வேறு யாருமல்ல - தபு.
தபு தப்பாக நினைத்திருக்க மாட்டார்!


Click it and Unblock the Notifications











