ஜான் ஆப்ரகாமுடன் தீபிகா காதலா? பரபரக்கும் பாலிவுட்
மும்பை: நீண்ட நாள் தோழியான பிபாஷா பாசுவைவிட்டு பிரிந்த சில நாட்களிலேயே ஜான் ஆப்ரகாமிற்கு புதிய தோழியாக தீபிகா படுகோனே கிடைத்துள்ளார்.
பிபாஷா பாசு சிங்குலாரிட்டி படத்தில் தன்னுடன் நடித்த ஜோஷ் ஹார்ட்னெட் மற்றும் தம் மாரோ தம் நடிகர் ராணாவுடன் சுற்றுக் கொண்டிருக்கிறார். ரோஹித் தவானின் தேசி பாய்ஸ் படபிடிப்பில் தீபிகா வைத்த கண் வாங்காமல் ஜான் ஆப்ரகாமையே பார்த்திருக்கிறார்(அப்போ சித்தார்த் மல்லையா?).
இது குறித்து ஒருவர் கூறியதாவது,
ஜான் ஆப்ரகாம், தீபிகா பற்றி தான் பாலிவுட்டே பேசிக் கொண்டிருக்கிறது. தேசி பாய்ஸ் லண்டன் படபிடிப்பில் இருவரும் ஓவர் நெருக்கமாகத் தான் இருந்துள்ளனர்.
ஜான், தீபிகா இருவரும் ஜோடி சேர்வார்கள், அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. என்ன செய்ய நடந்துவிட்டது.
ஜான், தீபிகா ஜோடி என்றால் இத்தனை நாள் ஜோடியாகச் சுற்றிய சித்தார்த் மல்லையா என்னாச்சு. சித்தார்த் மல்லையாவை காதலிப்பதாக தீபிகாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











