நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

தெலுங்கில் பிரபலமான நடிகை பர்ஸானா. இவர் தமிழில் 1977 படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தார். அனைத்து படங்களிலும் கிளாமராக நடித்ததால் இவருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது தெலுங்கு திரையுலகில். பர்சானாவும், தெலுங்கு நடிகர் அல்லாரி நரேசும் (குறும்பு பட ஹீரோ) காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இந்த காதல் கிசு கிசு பற்றி அல்லாரி நரேசிடம் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு தனது ட்விட்டர் தளத்தில் நரேஷ் இப்படிக் கூறியுள்ளார்:
"பர்ஸானாவுக்கும், எனக்கும் இடையேயான தொடர்பு பற்றி வெளிப்படையாக கேட்டதற்கு நன்றி. எங்களுக்குள் காதல் இல்லை. பர்ஸானாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் தனது கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார்," என்றார்.
இதன்மூலம் பர்ஸானா ரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி உள்ளது.
ஆனால் அவரது கணவர் குறித்து எதுவும் கூறப்படவில்லை.


Click it and Unblock the Notifications











