மனமுடைந்த ஷாஹீதை தேற்றும் ஜெனிலியா
மும்பை: பிரியங்கா சோப்ராவுடன் இருந்து பிரிந்த ஷாஹீத் கபூருக்கு நெருங்கிய தோழியாக இருந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறாராம் ஜெனிலியா.
ஷாஹீத் கபூரும், பிரியங்கா சோப்ராவும் பிரிவதும், சேர்வதும் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். ஆயினும் ரகசியமாக சந்தித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரியங்காவை விட்டுப் பிரிநத சோகத்தில் இருக்கும் ஷாஹீத்தை ஜெனிலியா தான் ஆறுதல் கூறித் தேற்றுகிறாராம். சான்ஸ் பி டான்ஸ் என்ற படத்தில் ஷாஹீதும், ஜெனிலியாவும் ஜோடியாக நடித்தனர். அன்று முதலே இருவரும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர்.
தேவைப்படும் நேரத்தில் தோள்கொடுப்பது தான் நட்பு என்பதை நிரூபித்திருக்கிறார் ஜெனிலியா (வேறெதுவும் இல்லப்பா). நட்பு என்ற பெயரில் தற்போது இந்த இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்களாம்.
இது பிரியங்காவுக்குத் தெரியுமா!


Click it and Unblock the Notifications











