முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்-நடிகை குட்டி ராதிகா

By Sudha

Kumaraswamy and Kutty Radhika
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது, என்று கன்னட நடிகை குட்டி ராதிகா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் குமாரசாமி. இந்த நிலையில் அவரது கேரக்டருக்கே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடி பேட்டி.

இயற்கை படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அடிப்படையில் இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று இவர் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் இவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் திரையுலகினருக்கு வந்துவிட்டது.

தொடர்ந்து விசாரித்ததில், குட்டி ராதிகாவை, அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி தன் கஸ்டடியில் எங்கோ ஒரு தீவில் வைத்திருப்பதாக தகவல் வந்தது. இருவரையும் விமான நிலையத்தில் ஒன்றாகப் பார்த்ததாகவும் வேறு சில இடங்களிலும் இருவரையும் ஜோடியாகப் பார்த்ததாகவும் முன்னணி பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வந்தன.

ஆனால் இதனை குமாரசாமி மறுத்தார். அவரது பதவி பறிபோன நிலையில் திடீரென்று வந்த குட்டி ராதிகாவும், குமாரசாமியுடனான உறவை மறுத்தார்.

4 வருடங்களுக்கு பிறகு குட்டி ராதிகா ஒரு பெண் குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கினார். குழந்தையின் தந்தை பற்றி மட்டும் அவர் வாய்திறக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கன்னட நாளிதழ் ஒன்றுக்கு திடீரென்று பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் தன் கணவர் என்றும், அவருடன் திருமணம் நடந்தது நூற்றுக்கு நூறு உண்மை, என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. இப்போது எனக்குபெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி யுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது...." என்றார்.

"இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனக்கு திருணம் ஆனதும் நான் லண்டன் சென்று விட்டேன். அவ்வப்போது அவர் (குமாரசாமி) வந்து செல்வார். 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை.

திருமணம் ஆன பிறகு, நான் பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நான் திரையுலகை விட்டு விலகி விட்டேன்.

என்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம்.எனது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையில் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன்.

ஆனால் அவர் அதை விரும்பவில்லை. நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம் என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்...", என்று கூறியுள்ளார் குட்டி ராதிகா.

ஏற்கெனவே அனிதா என்பவருடன் 1986-ல் குமாரசாமிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிகில் என்ற மகன் உள்ளார். அனிதா ஒரு சேட்டிலைட் சேனலை நிர்வாகித்து வருகிறார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நடிகை குட்டி ராதிகா விவகாரம், இப்போது அம்பலமாகியிருக்கிறது.

அதுவும் பாஜகவுக்கு எதிராக சரமாரியாக ஊழல் புகார்களை குமாரசாமி அடுக்கி வரும் நிலையில் அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடிப் பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ராதிகா கூறியுள்ளது குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது, இதுகுறித்து இப்போது நான் பேச விரும்பவில்லை. சரியான தருணம் வரும்போது பேசுவேன் என்று மட்டும் கூறினார்.

குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு ஷமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X