'மெகா' நடிகையின் மகா உறவு!
தமிழ், தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகைக்கும், பிரபல கேரக்டர் நடிகர் ஒருவருக்கும் இணை பிரியாத நட்பு ஏற்பட்டு அது ஆழமாகியுள்ளதாம்.
இருவரையும் அடிக்கடி ஹைதராபாத்தில் வைத்துப் பார்க்க முடிவதாகவும், இருவரின் நட்பும் வெகு ஆழமாகி வருவதாகவும் தெலுங்குத் திரையுலகில் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நடிகை தமிழில்தான் பெரும்பாலும் நடிக்கிறார். ஆனால் இவரது தாராளமான கவர்ச்சியாலும், இவர் நடித்த படங்கள் தெலுங்கிலும் ரிலீஸாவதால் அங்கும் நல்ல கிராக்கி உள்ளது இவருக்கு.
அவருடன் நட்பாகியுள்ள அந்த நடிகர், முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பல படங்களில் நடித்தவர். ஒரு காலத்தில் ஹீரோக்களின் தோழனாக நடித்தார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். பின்னர் குணச்சித்திர நடிகராகி விட்டார்.
இப்போது வயதாகி விட்டாலும் இன்னும் கூட அவருக்கும், அவரது நடிப்புக்கும் நல்ல பெயர் உள்ளது.
இவர் எப்படி அந்த நடிகையுடன் நட்பானார் என்று தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியமாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த நடிகர் தனது மனைவி வெகு காலத்திற்கு முன்பே டைவர்ஸ் செய்து விட்டார். இப்போது தனிமையில் இருக்கிறார். முன்பு போல கையில் படங்களும் இல்லை. இந்த நிலையில்தான் அந்த நடிகையின் நட்பு கிடைத்தது கூடவே ஆறுதலும் கிடைத்தது.
நடிகைக்கும், இது சேப்டியான உறவாகத் தோன்றவே தொடர்ந்து கொண்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











