வேட்டைக்காரன் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் கோவா!
வேட்டைக்காரன் படம் ரிலீசான பின்னரும் அதைப் பற்றி வெளிவரும் கதைகளுக்கு பஞ்சமில்லை.
இன்று வெளியாகியுள்ள, சற்றே லாஜிக் உள்ள ஒரு 'கதை' இது...
வேட்டைக்காரன் படம் ஒரு மாதத்தையாவது முழுசாகத் தாண்டுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளதாம் இப்போது.
ஒரு பக்கம் படம் படு சூப்பர் என்று விஜய்யும் அவரது தந்தையும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம், பொங்கலோடு இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் முடிவில் தீவிரமாக உள்ளது சன் பிக்சர்ஸ் என்கிறார்கள்.
பொங்கலுக்குப் பிறகு?...
வருகிற தைத்திருநாளையொட்டி சன் நிறுவனத்தி்ன் இரண்டு புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளனவாம்.
இந்தப் படங்கள் வெளியாகும்போது வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத்தான் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம்.
இதனால் இப்போது 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் படம், 50 நாட்களைக் கூட தாண்ட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
கடைசியில் அயனாவரம் கோபிகிருஷ்ணாவில் போட்டுத்தான் இந்தப் படத்தை 100 நாள் கணக்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம் விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏசியும்.
வெளிப்படையாக பூங்கொத்து கொடுத்தாலும், உள்ளுக்குள் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருக்கிறது என்கிறது விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம்.
அப்படி என்னென்ன படங்களை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருக்கிறது சன் பிக்சர்ஸ்?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவா மற்றும் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை!.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள் மீரான்சாகிப் தெருக்காரர்கள்.


Click it and Unblock the Notifications











