அமெரிக்க தொழிலதிபருடன் நடிகை சாக்ஷி ரகசிய திருமணம்!

வேதம், மாப்பிள்ளை கவுண்டர், வாஞ்சிநாதன், மானஸ்தன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், சாக்ஷி.
மும்பையைச் சேர்ந்த இவர், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. புதிய வாய்ப்புகளையும் மறுத்து வந்தாராம்.
இதற்குக்காரணம், சாக்ஷிக்கும் அமெரிக்க தொழிலதிபர் பிரம்மபட் என்பவருக்கும் ஏற்பட்ட காதல் என்றும் இந்தக் காதலுக்கு இருதரப்பில் கடும் எதிர்ப்பு நிலவியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த எதிர்ப்பு அவர்களது காதலை ஒன்றும் செய்ய முடியவில்லை. காதலரைக் கைப்பிடித்தே தீருவதென்று உறுதியாக இருந்த சாக்ஷி, திடீரென்று தனது காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் மும்பையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பிரம்மபட் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிப்பதால், கணவருடன் சாக்ஷியும் பாஸ்டனுக்கே சென்றுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











