படத் தயாரிப்புக்கு சௌந்தர்யா 'கும்பிடு'?

By Staff

Soundarya
கடை திறந்த முதல் போணி முடியும் முன்பே ஏறக்கட்டிய கதையாகிவிட்டது ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திரையுலக தயாரிப்பாளர் முயற்சி.

ஆக்கர் ஸ்டுடியோ எனும் பெயரில் கிராபிக்ஸ் நிறுவனம் ஆரம்பித்து, நிறைய படங்களுக்கு அசத்தலாக கிராபிக்ஸ் பணிகள் செய்தார். அவ்வப்போது, ஆழியாறு டேமில் டால்பின்கள் துள்ளிக் குதிப்பது போன்ற ஒட்டு வேலைகள் செய்து கிண்டலுக்கும் ஆளானார்.

கிராபிக்ஸ் பொழுது போக்கோடு நின்றுவிடாமல், சினிமா தயாரிப்பு என்ற வழுக்குப் பாறையிலும் கால் வைக்க ஆரம்பித்தார் சௌந்தர்யா.

அப்பா ரஜினியை வைத்து சொந்தமாக படம் தயாரித்து இயக்குவதாக அறிவித்தவர், பின்னர் வரிசையாக பெரிய புராஜக்டுகளை அறிவித்தார். அதில் ஒன்று கோவா. வெங்கட் பிரபுவின் சுபாவம் தெரியாமல் இறங்கியவருக்கு, அவரை வைத்த செலவுகளைப் பார்த்து கிர்ரடித்துவிட்டதாம்.

இருந்தாலும் நிலைமையைச் சமாளித்து கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு படத்தை முடித்துவிட்டுப் பார்த்தால், படத்தின் பட்ஜெட் ரஜினி பட ரேஞ்சுக்கு வந்து நிற்கிறதாம். இன்னும் இந்தப் படத்தை விற்று போட்ட முதலை எடுத்து வாங்கிய கடனை அடைத்து... ம்ஹூம்.. இது வேலைக்காகாது என்று தெரிந்துவிட்டதாம் ரஜினிக்கு.

எனவே இதுவரை தயாரிப்பில் உள்ள படங்களை சட்டுபுட்டென்று முடித்துவிட்டு, படத்தயாரிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, இப்போது கற்ற பாடங்களை வைத்துக் கொண்டு, பின்னாளில் நிதானமாக படம் எடுத்துக் கொள்ளலாம் என தந்தையும் தாயும் சொன்ன அறிவுரையை சௌந்தர்யாவும் ஏற்றுக் கொண்டார் என்கிறார்கள்.

இதனால் கவுதம் மேனனுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் திரும்ப வாங்கிக்கொள்ள முடிவு செய்துவிட்டாராம்.

ஆக கோவா, சுல்தானோடு தயாரிப்புக்கு தற்காலிக புள்ளி வைக்கிறார் சௌந்தர்யா ரஜினி!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X