ப்ருத்விராஜை லவ்வும் பாவனா?

இப்போது மீண்டும் பிறந்த வீட்டுக்கே... அதாவது மலையாளத்துக்கே திரும்பிவிட்டார்.
அங்கே தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றனவாம். ஆனால் பெரும்பாலும் ப்ருத்விராஜுடன்தான் இணைந்து நடிக்கிறாராம் பாவனா.
இவர்களின் சினிமா நெருக்கம், நிஜத்திலும் தொடர்வதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ப்ருத்விராஜ் ஏற்கெனவே நான்கு முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நிஜத்திலும் ப்ளே பாய் என்றே பெயரெடுத்தவர்!
இப்போது ஐந்தாவதாக பாவனாவா? என்ற கேள்வியுடன் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாவனாவிடம் கேட்டபோது, "இது எனக்குப் புதிதில்லை. தொடர்ந்து என்னைப்பற்றி கிசுகிசுக்கள் வருகின்றன. பிருத்விராஜுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். இருவரும் சேர்ந்து நடித்ததால், காதல் என்று கிளப்பிவிட்டுவிட்டனர்.
இதற்கு முன் வேறு ஒரு நடிகருடன் இணைத்து இதுபோன்று செய்திகள், வந்தன. இப்போது ப்ருத்விராஜ். காதல் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. சினிமாவில் இன்னும் ஒன்றும் சாதிக்கவில்லை. அதற்குள் காதலா?
இப்போதைக்கு என் கைவசம் எதுவும் படங்கள் இல்லைதான். ஆனாலும், மீண்டும் ஒரு ரவுண்ட் வருவேன்", என்றார்.


Click it and Unblock the Notifications











