ஆர்யாவை தேடி வந்த நிலா!

கோலிவுட்டில் அவ்வப்போது பல காதல்கள் உருவாகும், சில காதல்கள் உறுதியாக இருக்கும். சிலகாதல்கள் உதிரிப் பூக்களாகிப் போகும். இந்த வகையில் ஆர்யா, நிலா காதலை எந்த 'டேக்சானமி'யில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அவர்களின் அனாட்டமி இன்னும் புரியாத புதிகராக இருப்பதே இதற்குக் காரணம்.
இருவரும் ஒரு படத்திலும் இணைந்து நடித்ததில்லை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்காக போன இடத்தில் பற்றிக் கொள்ள, நட்பாகி இப்போது காதலில் கசிந்துருகிக் கொண்டிருக்கின்றனர்.
ஆர்யாவைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லையாம் நிலாவுக்கு. போனிலாவது பேசி விட வேண்டும். இல்லாவிட்டால், இருப்பு கொள்ளாதாம்.
இப்படி காதல் ஜூரம் படு வேகமாக எகிறிக் கொண்டிருந்த நேரம் பார்த்து பாலா அவர் பாட்டுக்கு நான் கடவுள் ஷூட்டிங்கை தேனி பக்கம் வைத்து விட்டார். இதனால் இரு பறவைகளும் பிரிய வேண்டியதாயிற்று.
இருந்தாலும் நிலாவாவது, விடுவதாவது. அவ்வப்போது மதுரைக்குப் பறந்து வந்து அங்கிருந்து ஆர்யாவுக்கு போனைப் போட்டு, அவர் அப்படியே தேனியிலிருந்து தேனீயின் வேகத்தில் விரைந்து வந்து நிலாவைப் பார்த்து குசலம் விசாரிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.
அப்படி ஒரு கதை சமீபத்தில் நடந்துள்ளது. நிலாவுக்கு ஆர்யா போன் போட்டு மதுரைக்கு வருமாறு கூற, அன்று இரவே நிலாவும் மின்னல் வேகத்தில் மதுரைக்கு விரைந்தார். பின்னர் அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கிய நிலா, ஆர்யாவுக்கு தாக்கலைப் போட, அவரும் 'பாலாண்ணனிடம் ஒன்டே பெர்மிஷன்' வாங்கிக் கொண்டு மதுரைக்கு ஓடினார்.
அன்று இரவு ஒரே அறையில் இருவரும் தங்கியிருந்தார்களாம். மறு நாள் கோழி கூவிய பிறகுதான் வெளியே வந்தனராம். பிரிய முடியாமல் பிரிந்து தத்தமது ஸ்பாட்டுகளுக்குப் பறந்தனராம்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவஸ்தையோ?


Click it and Unblock the Notifications











